Breaking

Wednesday, April 12, 2017

காற்றில் ஓடும் கார் கண்டுபிடிப்பு அரக்கோணம் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை

காற்றில் ஓடும் கார் கண்டுபிடிப்பு அரக்கோணம் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை

காற்றில் ஓடும் கார் கண்டுபிடிப்பு அரக்கோணம் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை
காற்றில் ஓடும் கார் கண்டுபிடிப்பு அரக்கோணம் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை


அரக்கோணம்,

நாட்டில் டீசல், பெட்ரோல் விலை அடிக்கடி உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் நடுத்தர மக்கள் கார் வாங்கி அதில் பயணம் செய்யலாம் என்ற கனவு, கனவாகவே போய் விடுகிறது.

நடுத்தர மக்களின் கனவை போக்கும் வகையில் அரக்கோணம் கிருஷ்ணா பொறியியல் கல்லுரியில் மெக்கானிக்கல் பிரிவில் 4–ம் ஆண்டு படிக்கும் வி.ராஜ்குமார், பி.ஹேமந்த்குமார், ஆர்.பிரேம்குமார், ஜெ.மகேஷ் ஆகியோர் கூட்டு முயற்சியில் காற்றில் இயங்கும் புதிய கார் ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். இந்த காரில் காற்று நிரப்பினால் ஓடும் வகையில் வடிவமைத்து உள்ளனர்.

காரின் சிறப்புகள் குறித்து மாணவர்கள் கூறியதாவது:–

4 பேர் செல்லலாம்

நாம் சுவாசிக்கும் காற்று மாசுபடாமல் இருக்கவும், சுற்றுச்சூழல் மாசுபாடாமல் இருக்கும் வகையில் நாங்கள் இந்த காரை கண்டுபிடித்து உள்ளோம். இந்த காரில் 10 பார் காற்றின் அளவு கொண்ட ‘டபுள் ஆக்டிவ் சிலிண்டர்’ பொருத்தப்பட்டு உள்ளது. இதில் காற்று நிரப்பினால் கார் செல்லும்.

இந்த கார் 4 பேர் அமர்ந்து 10 கிலோ மீட்டர் வேகத்தில் 10 கிலோமீட்டர் தூரம் செல்லலாம். 300 கிலோ எடைதிறனை தாங்கி செல்லும். காரில் அமர்ந்து செல்வபவர்களின் எண்ணிக்கை குறைய, குறைய காரின் வேகம் அதிகரிக்கும்.

இந்த காரில் உள்ள சிலிண்டரில் 10 நிமிடத்தில் 10 பார் காற்றை நிரப்பி விட முடியும். பெட்ரோல், டீசல் விலையோடு ஒப்பிடும்போது இந்த காருக்கு ஆகும் செலவு மிகவும் குறைவாகும். காரை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் ஓட்டலாம், டிரைவிங் தெரியாதவர்களும் ஓட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த காரினால் காற்று மாசுபடாது, சத்தம் எதுவும் கேட்காது. தற்போது காரை ரெயில் நிலையம், மருத்துவமனைகள், விமானநிலையம், தொழிற்சாலைகள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் முதலில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கி உள்ளோம். விரைவில் சாலையில் மக்கள் பயன்படுத்தும் அளவிற்கு கொண்டு வருவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பரிசு

முன்னதாக புதியதாக கண்டுபிடித்த காரை கிருஷ்ணா கல்வி நிறுவன வளாகத்தில் செயல்படுத்தி காட்டினார்கள்.

காற்றில் இயங்கும் காரை கண்டுபிடித்த மாணவர்களை கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.ஆர்.சுப்பிரமணியம், செயலாளர் டி.எஸ்.ரவிக்குமார், இயக்குனர் கே.சாம்பமூர்த்தி, மெக்கானிக்கல் துறை தலைவர் கார்த்திகேயன், உதவி பேராசிரியர் சுதாகர் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினார்கள்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அருண்பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Comment here