Breaking

Wednesday, February 15, 2017

இவர்கள் அரசியலுக்கு வராமல் போயிருந்தால்!

இவர்கள் அரசியலுக்கு வராமல் போயிருந்தால்!

 

இவர்கள் அரசியலுக்கு வராமல் போயிருந்தால்!
இவர்கள் அரசியலுக்கு வராமல் போயிருந்தால்!


➦ பேரறிஞர் அண்ணா அரசியலுக்கு வராமல் போயிருந்தால் பச்சையப்பன் கல்லு}ரியில் பொருளாதார பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்று இருப்பார்.

➦ கருணாநிதிக்கு, ஆரூர்தாசுக்கு முந்தைய இடம் தமிழ் திரையுலகில் கதை வசனத்தில் கிடைத்து இருக்கும்.

➦ இராஜாஜி சேலத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி தனது பேர் சொல்லும் அளவிற்கு ஜீனியர்களை உருவாக்கியிருப்பார்.

➦ காமராஜருக்கு விருதுநகர் வர்த்தகம் கைகொடுத்து இருக்கும்.

➦ எம்.ஜி.ஆரின் வாழ்க்கை ஜெமினி கணேசனை போல் இறுதி வரை நடிப்பாகவே இருந்திருக்கும்.

➦ சரோஜாதேவியை போல, ஜெயலலிதாவும் ஆண்டுக்கு ஒருமுறை பெங்கள ரில் இருந்து இங்கு வந்து பொங்கலுக்கு சிறப்பு பேட்டிகள் கொடுத்து விட்டு போயிருக்கலாம்.

➦ ஒ.பி.ஸ் டீக்கு பெரியகுளம் வட்டாரத்தில், கும்பகோணம் டிகிரி காப்பிக்கு இணையான பிராண்ட் வேல்யு கிடைத்து இருக்கும்.

➦ அண்ணாதுரை, கருணாநிதி, ராஜகோபாலன், சின்னசாமி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, பன்னீர்செல்வம் போன்றவர்களை புகழின் உச்சிக்கு கொண்டு உட்கார வைத்தற்கு பெயர் தேர்தல் தான்.

➦ அண்ணா இறந்து போன போது கூடிய கூட்டம் கின்னஸ்ஸில் இடம்பெற்றது. ஆனால் அவர் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் தோற்றுபோனார்.

➦ நேருவிற்கு பிறகு யார் பிரதமர் என்று கேள்வி எழுந்தபோது லால்பகதூர் சாஸ்த்ரியை சொன்ன காமராஜர், சாஸ்த்ரி மறைவிற்கு பிறகு இந்திராவை அழைத்து வந்த காமராஜர், தான் சொந்த ஊரான விருதுநகரில் கல்லு}ரி பருவம் கூட தாண்டாத பே.சீனிவாசனிடம் வெற்றியை பறிகொடுத்தார்.

➦ தென்னகத்தின் மேர்லேட் பிரண்டோ என்று கொண்டாடப்பட்ட சிம்மக்குரலோன் சிவாஜி கணேசனை சொந்த மண்ணான திருவையாறு வெற்றி பெற வைக்கவில்லை.

➦ மிஸ்டர் ராஜிவ் காந்தி எங்கே ஓடுகிறீர்கள் என்று நாடாளுமன்றத்தை நடுங்க கேட்ட வை.கோ.வை விருதுநகர் அரவணைக்கவில்லை.

➦ ஊரார் மெச்சிய பிள்ளைகளை, சொந்த வீட்டில் அந்நியனாக்கியதன் பெயரும் தேர்தல் தான்.

➦ ஒரு மணி நேரத்திற்கு 10 லட்சம் கட்டணம் வாங்கும் வக்கில் கூட 'மை லாட்" என்று கூப்பிடும் இடத்தில் இருந்த உச்ச நீதிமன்ற நீதிபதி வீராசாமி, சிவகாசி வெய்யிலில் அலைந்ததும், கையில் செங்கோலுடன் ஒருவர் முன்னே நடக்க காற்றுக் கூட குறுக்கிட முடியாத பாதுகாப்புடன் ஏராளமானவர்களின் வணக்கத்தை வாங்கியபடி பின்னே நடந்து வந்த உயர்நீத மன்ற நீதிபதி சாமிதுரை விழுப்புரம் வீதிகளில் பார்ப்பவர்கள் அனைவரையும் வணங்கிப் போனதும், இந்திய அளவில் புகழ் பெற்ற பல் மருத்துவரான பி.பி.ராஜன் நெல்லை தொகுதி வேட்பாளரான பிறகு அடையாளம் தெரியாதவர்களை எல்லாம் பார்த்து சிரித்ததும், எதனால் தேர்தலால் தான்.

➦ அயோக்கியனின் கடைசி புகழ் அரசியல் என்று வெளிநாட்டவர் எவரோ சொன்னாராம்!.. அவருக்கு அதை பற்றி தெரியவில்லை நான் சொல்கிறேன் அயோக்கியனின் முதல் புகழிடமே அரசியல்தான் என்று சொன்ன கண்ணதாசனும் அரசியல்வாதியாக தான் இருந்தார். அரசியல் என்பது மூளையற்ற மந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது என்று சொன்ன ஜெயகாந்தனும் அரசியலில் பங்கேற்றார்.

➦ திராவிட மொழி ஞாயிறு தேவநேய பாவாணரை தலைமேல் தூக்கி தலைவராக ஏற்றுக் கொண்ட தமிழ்குடிமகனையும் அது விடவில்லை.

➦ அதிகார வர்கத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்த எக்ஸ்பிரஸ் கோயாங்காவும் அதில் மூழ்கினார். தேர்தல் மோகம் யாருக்கு வராது.

கடந்த காலம் தெரிவோம்!...
கடந்த காலம் தெரியாதவற்களுக்கு நிகழ் காலம் புரியாது...!
நிகழ் காலம் புரியாதவர்களுக்கு எதிர் காலம் கிடையாது...!

No comments:

Post a Comment

Comment here