டீக்கடை முதல் கோட்டை வரை திரு.ஓ.பி.எஸ் அவர்கள் கடந்துவந்த பாதை
ஓ.பி.எஸ் ➠ அமைதியின் உருவமாய் தெரியும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் வாழ்க்கை மிகுந்த ஏற்ற, இறக்கங்கள் கொண்ட ஒரு நெடிய பயணத்திற்கு பிறகுதான் அது சாதனை பயணமானது.
OPS.அவர்கள் கடந்து வந்த பாதை :
ஓ.பி.எஸ் ➠ 1951ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓட்டக்காரத்தேவருக்கும் பழனியம்மாளுக்கும் மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் பேச்சிமுத்து ஆகும்.
ஓ.பி.எஸ் ➠ பள்ளிப்படிப்பை பெரியகுளத்தில் முடித்தார் பன்னீர் செல்வம். பின்னர், உத்தமபாளையம் ஹhஜி கருத்த ராவுத்தர் கல்லு}ரியில் பி.ஏ வரலாறு படித்தார். அப்போது வரலாறு படைப்போம் என அவர் எதிர்பார்க்கவில்லை.
ஓ.பி.எஸ் ➠ முதலில் பெரியகுளம் மார்க்கெட்டில் வட்டி தொழில், லாரிகளுக்கு பைனான்ஸ் மற்றும் பால் பண்ணை போன்ற தொழில்களில் இருந்த ஓ.பி.எஸ் அவர்கள், நண்பருடன் சேர்ந்து பெரியகுளத்தில் டீக்கடை ஆரம்பித்தார். இந்தக்கடையே இவருக்கு வாழ்வாதாரமாக இருந்தது.
ஓ.பி.எஸ் ➠ 1987-ல் எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு ஜானகி அணியில் புகழோடு இருந்த கம்பம் செல்வேந்திரன் தயவால் பெரியகுளம் ஜானகி அணிக்கு ஓ.பி.எஸ் நகர செயலாளரானார்.
ஓ.பி.எஸ் ➠ 1991ல் அதிமுக ஒருங்கிணைந்தது. இதையடுத்து முதன்முதலில் பெரியகுளம் நகர கூட்டுறவு வங்கியின் இயக்குநரானார். அங்கு தான் முதன்முதலில் அதிகாரத்தை தொட்டு பார்த்தார் பன்னீர் செல்வம்.
ஓ.பி.எஸ் ➠ 1996ல் அதிமுக நகர செயலாளராக இருந்த ஓ.பி.எஸ்-க்கு பெரியகுளம் நகர்மன்றத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வென்றார்.
ஓ.பி.எஸ் ➠ 2000ம் ஆண்டில் டிடிவி தினகரன் சந்திப்பு மற்றும் தொடர்பு, இதுவே ஓ.பி.எஸ்சின் வளர்ச்சிக்கு துணையாக அமைந்தது.
ஓ.பி.எஸ் ➠ 2001ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் டிடிவி தினகரன் மூலம் பெரியகுளம் தொகுதியில் ஓ.பி.எஸ் போட்டியிட வாய்ப்பு கிடைக்க காரணமாக அமைந்தது.
ஓ.பி.எஸ் ➠ 2001 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக சட்டசபைக்குள் நுழைந்தார். முதன்முறையிலேயே அமைச்சரானார்.
ஓ.பி.எஸ் ➠ வருவாய்த்துறை அமைச்சராக 2001ம் ஆண்டு மே 19 முதல் 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி வரை பதவி வகித்தார்.
ஓ.பி.எஸ் ➠ 2001ம் ஆண்டு டான்சி வழக்கில் ஜெயலலிதா பதவி இழந்த போது சசிகலாவால் முதல்வர் நாற்காலியில் அமரவைக்கப்பட்டார். ஜெயலலிதா விடுதலை ஆன பின் 2002ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.
ஓ.பி.எஸ் ➠ 2006ம் ஆண்டு தேர்தலில் தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு 2 ஆவது முறையாக எம்.எல்.ஏ ஆனார். தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் எதிர்கட்சி துணைத்தலைவராகவும் பணியாற்றினார்.
ஓ.பி.எஸ் ➠ 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனு}ர் தொகுதி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நிதி அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், அவை முன்னவர் என்று மே 16ம் தேதி 2011 முதல் 28, செப்டம்பர் 2014 வரை பணியாற்றினார்.
ஓ.பி.எஸ் ➠ 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி சொத்துக் குவித்த ஊழல் வழக்கில் பெங்கள ரு சிறப்பு நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பால் மீண்டும் முதல்வரானவர் பன்னீர்செல்வம் அவர்கள்.
ஓ.பி.எஸ் ➠ தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் மீண்டும் 3வது முறையாக முதல்வராகியுள்ளார் ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்.
No comments:
Post a Comment
Comment here