Breaking

Sunday, February 5, 2017

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சராக சசிகலா தேர்வு; பன்னீர் செல்வம் ராஜினாமா

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சராக சசிகலா தேர்வு; பன்னீர் செல்வம் ராஜினாமா

 

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சராக சசிகலா தேர்வு; பன்னீர் செல்வம் ராஜினாமா


சென்னை,

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

  அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், தமிழகத்தின் முதல்–அமைச்சராகவும் இருந்து வந்த ஜெயலலிதா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5–ந்தேதி மரணமடைந்தார்.

இன்றோடு அவர் மரணமடைந்து 2 மாதங்கள் ஆகும் நிலையில், இந்த கால இடைவெளியில் அக்கட்சியில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலாவும், முதல்–அமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும் பொறுப்பேற்றுக் கொண்டனர். கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கும் பலர் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில், அக்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் பலர் ஆட்சியும், கட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்தனர். அதாவது, கட்சியை தலைமை ஏற்று நடத்துபவரே, முதல்–அமைச்சராகவும் இருக்க வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கையாக இருந்தது. சசிகலாவே முதல்–அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்றும் பலர் கூறி வந்தனர்.

இதனால், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருக்கும் சசிகலா, முதல்–அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த மாதம் (ஜனவரி) 27–ந்தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. ஆனால், அந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

ஒருவார கால இடைவெளியில், தற்போது 2–வது முறையாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியது. போயஸ் கார்டனில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

சசிகலா தேர்வு

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 

 சட்டமன்ற குழுத் தலைவராக சசிகலாவை ஒ.பன்னீர் செல்வம் முன்மொழிந்தார். அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதால் சசிகலா முதல்-அமைச்சர் ஆகிறார்.

சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள பட்சத்தில், விரைவில் அவர் தமிழகத்தின் முதல்–அமைச்சராக பொறுப்பேற்றுக்கொள்வார் என்று கூறப்படுகிறது. சட்டமன்ற குழுத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டு உள்ளநிலையில், அவரிடம் ஒ.பன்னீர் செல்வம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து உள்ளார். 7-ம் தேதி முதல்-அமைச்சராக பதவியேற்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக டுவிட்டரில் சசிகலா முதல்-அமைச்சராகிறார் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Source by: http://www.dailythanthi.com/News/State/2017/02/05151310/Sasikala-Natarajan-all-set-to-become-the-Next-CM-of.vpf

No comments:

Post a Comment

Comment here