போலீசுக்கு உத்தரவு போட்டது யாரு? கோட்டையில் கொந்தளித்த ஓபிஎஸ்
சென்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்த போலீஸுக்கு உத்தரவிட்டது யார்? என தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளிடம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கொந்தளிப்புடன் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து தமிழக முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். வர்தா புயலின் போது முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விரைந்து செயல்பட்டது அனைவராலும் பாராட்டப்பட்டது.
ஒத்துழைத்த போலீஸ்
இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு விவகாரம் விஸ்வரூபமெடுத்தது. மாணவர்கள், இளைஞர்கள் அறவழியில் போராடி தொடக்கத்தில் போலீசார் திணறியபோதும் ஒருகட்டத்தில் போராட்டக் குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.
சசிக்க முடியாத கும்பல்
இதனைத் தொடர்ந்து டெல்லி சென்று அவசர சட்டம் பிறப்பித்து, நிரந்தர சட்டத்துக்கும் வழிவகுத்து விட்டார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் இதை சகிக்க முடியாத நிலையில் இருந்ததாம் அதிகாரத்துக்கு பேராசைப்படுகிற கும்பல்.
திட்டமிட்டு ஏவப்பட்ட வன்முறை
அந்த கும்பலின் உறவினர்கள் உளவுத்துறையில் ஏற்கனவே நியமிக்கப்பட்டுவிட்டனர். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடுத்தடுத்து வெற்றி பெறுவதைத் தடுக்க அவர் மீது தீரா களங்கத்தை உருவாக்கவே வரலாறு காணத யுகப் புரட்சியாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த மீனவ மக்கள் மீதும் போலீஸ் வன்முறையை ஏவியதாம்.
கொந்தளித்த ஓபிஎஸ்
இது தொடர்பாக தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். அப்போது, இப்படி கொடூரமாக தாக்குதல் நடத்த போலீசுக்கு யார் உத்தரவு போட்டது? என கொந்தளித்திருக்கிறார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் என்கின்றன தலைமைச் செயலக வட்டாரங்கள்.
No comments:
Post a Comment
Comment here