பெண் டாக்டர்கள் உடைமாற்றும் அறையில் ரகசியமாக செல்போன் வைத்து வீடியோ எடுத்த வார்டுபாய் கைது
மும்பை கே.இ.எம். ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் 26 வயது பெண் டாக்டர் ஒருவர் சம்பவத்தன்று மருத்துவமனையில் உள்ள உடை மாற்றும் அறைக்கு சென்றார். அப்போது அந்த அறையில் செல்போன் ஒன்று மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை பார்த்தார். இதையடுத்து அவர் அந்த செல்போனை எடுத்து சோதனை செய்தபோது, அதன் கேமரா செயல்பாட்டில் இருந்தது தெரிந்தது.
மேலும் அந்த செல்போனில் தன்னுடன் வேலை பார்க்கும் 4 பெண் டாக்டர்கள் உடை மாற்றும் காட்சியும் பதிவாகி இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தார்.
அவர்கள் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மருத்துவமனையில் உள்ள உடை மாற்றும் அறைக்குள் செல்போனை வைத்து படம் பிடித்தது அந்த மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் வார்டுபாய் சமன்சவுகான்(வயது29) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:
Post a Comment
Comment here